Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

Tuesday, September 15, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் மூன்று நாள் சிறப்பு முகாம்..!

 
⏰நேரம்: காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை ⏰_
_🏫இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்.🏫_
*_👨‍🎓 1. கல்வி உரிமை (RTE) ONLINE விண்ணப்பிக்கும் முகாம் 👨‍🎓_*
_📆நாள்: 22-09-2020 செவ்வாய்க்கிழமை📆_
*_💵 2. சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கான ஆன்-லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் 💵_*
_📆நாள்: 23-09-2020 புதன்கிழமை 📆_
*_🩸3. இரத்தான கொடையாளர்கள் சேர்க்கை முகாம்🩸_*
_📆நாள்: 24-09-2020 வியாழக்கிழமை📆_
_📌இச்சேவை முற்றிலும் இலவசம்._
_📌அணைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பங்கு பெறலாம்._
_📌முகாமில் பங்கேற்க்கும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை (ஆர்செனிக்கம் ஆல்பம் 30C) இலவசமாக வழங்கப்படும்_

Thursday, August 20, 2020

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி :

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள்_
_விண்ணப்பிக்க இன்றே கடைசி விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க_
*_🏫Alif School🏫_*

Sunday, August 16, 2020

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

_பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள்_
_விண்ணப்பிக்க இன்றே கடைசி விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க_
*_🏫Alif School🏫_*

Wednesday, July 29, 2020

BREAKING NEWS

🔊 *நாளை மறுநாள் (31-07-2020) பிளஸ் 1 ரிசல்ட் மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு ரிசல்ட் வெளியீடு!*
*🅰️lif School*

Wednesday, July 22, 2020

FLASH NEWS

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- மார்ச் 2020- விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு 24.07.2020 முதல் 30.07.2020 வரை விண்ணபிக்கலாம்- மதிப்பெண் பட்டியல் 25.07.2020 முதல் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!!_
*_Alif School_*

Wednesday, July 15, 2020

கல்வி தொலைகாட்சி மூலம் பாடம்- அட்டவணை வெளியீடு..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு.
காலை 6.00 மணிக்கு நீட், JEE போன்ற படிப்புகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாட்டனி பாடம் நடத்தப்படவுள்ளது.
காலை 7.00 – 8.00 மணி வரை இயற்பியல் பாடமும் நடத்தப்படும் என கூறப்பட்டிருக்கின்றது.
இரவு 7.00 – 8.00 மணி வரை வேதியியல்,
இரவு 8.00 – 9.00 மணி வரை விலங்கியல்
காலை 8.00 – 8:30 மணி வரை 10ம் வகுப்பிற்கான தமிழ் பாடமும்,
காலை 8:30 – 9.00 மணி வரை 10ம் வகுப்பு ஆங்கில பாடமும் நடத்தப்படவுள்ளது.
இதுபோன்று ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை கற்று கொள்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Monday, July 13, 2020

பொறியியல் படிப்புக்கு இன்று (15-07-2020) மாலை 6 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - link இணைப்பு..! | Alif School

 இன்று (15-07-2020) மாலை 6 மணி முதல் பொறியியல் படிப்பிற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.
இன்று (15-07-2020) மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை பொறியியல் படிப்பிற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★

Tuesday, May 12, 2020

நோயாளிகளிடம் தாயன்பு காட்டி சேவையாற்றும் நம் செவிலியர்களை பாராட்டி போற்றுவோம்!

#InternationalNursesDay | #உலகசெவிலியர்கள்தினம்

நோயாளிகளிடம் தாயன்பு காட்டி சேவையாற்றும் நம் செவிலியர்களை பாராட்டி போற்றுவோம்!

#AlifSchool | #NursesDay2020 | #Respect

To the nurses of the world:

 Happy International Nurses Day, a day that we dedicate to YOU!

 Thank you for working round the clock to fight the COVID-19 pandemic.

 Thank you for the difference you are making, every day and everywhere.

Saturday, April 18, 2020

தஞ்சை மாவட்ட புனித ரமலான் நோன்பு கால அட்டவணை 2020 - அலிஃப் மெட்ரிக் பள்ளி..!

தஞ்சை மாவட்ட புனித ரமலான் நோன்பு கால அட்டவணை 2020 - அலிஃப் மெட்ரிக் பள்ளி..!
Tanjore District Ramadan fasting schedule 2020 - Alif Matric School ..!

Wednesday, March 25, 2020

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Tuesday, July 22, 2014

பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வரக்கூடாது.

பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வரக்கூடாது.


-பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

Tuesday, June 25, 2013

தமிழகத்தில் பள்ளி வேலை நேரம், திடிர் மாற்றம்! நாளை முதல் காலை 9 மணிக்கு பள்ளிகள், இயங்கும் திட்டம் அமல்படுத்த படும் என எதிர்பார்ப்பு!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளின் வேலை நேரத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதையடுத்து, காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும் எனக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் இதுவரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்து வந்தன. இனிமேல் முப்பருவ முறை கொண்டு வரப்பட உள்ளது. இக் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்கள் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு பாட வேளையும் 45 நிமிடங்களாக இருந்தது. காலை 9 மணிக்குத் துவங்கும் பள்ளியில் 9.20 வரை இறைவணக்கம் நடத்தப்படும். 9.20 முதல் 10 மணி வரை முதல் பாட வேளை தொடங்கும் என்று அந்த சுற்நறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கடைசியாக ஒரு மணி நேரத்தில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பேச்சாற்றல், நடிப்பாற்றல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் நடவடிக்கைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இம்மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, May 27, 2013

கோடை வெயில்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளி வைப்பு- ஜூன் 10-ல் தான்..!

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் தொடர்வதால் தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஒருவாரம் கழித்து 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்து போய்விடவில்லை. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக 10--ந் தேதிக்கு திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிகள் திறப்பை ஒருவார காலம் ஒத்தி வைத்துள்ளது. தமிழகத்திலும் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, April 16, 2013

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டு தோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், அரசு இணையதளங்களில் மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் இணையதளங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது.

Monday, March 4, 2013

தேர்வு நாள் சிந்தனைகள்...!

அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களின் தேர்வு காலம் இது. குறிப்பாக 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்கள் அரசு தேர்வுகளை முடிக்கும் நிலையிலும் பிற மாணவர்கள் இன்னும் சில தினங்களில் துவங்கவிருக்கும் தங்கள் தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கும் இந்நேரத்தில் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்திற்கும் சில அறிவுரைகள்.

தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் ஒற்றுமை இணையக்குழு துஆச் செய்கிறது அவர்கள் மகத்தான வெற்றிபெறுவதற்கு மனதார பாராட்டுகிறது.

பெற்றோருக்கு அறிவுரைகள்
1. தேர்வு என்றவுடனேயே மாணவர்களை பீதிக்குள்ளாக்கி அச்சுறுத்தும் நிலையைத்தான் நாடெங்கும் பார்க்கிறோம். தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஒரு மாணவனின் ஒட்டுமொத்த இலட்சியம் என்பதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டுள்ளது. நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறத்தான் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆயினும் அல்லாஹ்விடம் தவக்குல், மற்றும் ஈமானிய நிலை இதன்மூலம் மறக்கடிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. பெற்றோர்களே! மறுமையில் வெற்றிபெறுவதைத்தான் ஒவ்வொரு முஸ்லிம் மாணவ மாணவியர்களின் முதல் குறிக்கோளாக போதிக்கப்படுவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதைத்தான் முதல் இலட்சியமாக மனதில் பதிய வைக்கப்படவேண்டும். இவ்வுலக கல்விகளின் தேர்வுகள் அதை ஒப்பிடும்போது இரண்டாம் நிலையில்தான் வைக்கப்பட வேண்டும்.