Tuesday, June 25, 2013

தமிழகத்தில் பள்ளி வேலை நேரம், திடிர் மாற்றம்! நாளை முதல் காலை 9 மணிக்கு பள்ளிகள், இயங்கும் திட்டம் அமல்படுத்த படும் என எதிர்பார்ப்பு!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளின் வேலை நேரத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதையடுத்து, காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும் எனக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் இதுவரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்து வந்தன. இனிமேல் முப்பருவ முறை கொண்டு வரப்பட உள்ளது. இக் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்கள் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு பாட வேளையும் 45 நிமிடங்களாக இருந்தது. காலை 9 மணிக்குத் துவங்கும் பள்ளியில் 9.20 வரை இறைவணக்கம் நடத்தப்படும். 9.20 முதல் 10 மணி வரை முதல் பாட வேளை தொடங்கும் என்று அந்த சுற்நறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கடைசியாக ஒரு மணி நேரத்தில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பேச்சாற்றல், நடிப்பாற்றல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் நடவடிக்கைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இம்மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.