About School

தெளிவான பாதையில் ஒளி நிலவாய் நடைபோடும் அலிஃப் மெட்ரிக் பள்ளி..!

தமிழகத்தின் நெற்களஞ்சியமாய், தரணிக்கே உணிவளிக்கும் தாயாய் திகழ்ந்திடும் தஞ்சை மாவட்டத்தில் கிரமியக் கலாச்சாரமும், நகர நாகரீகமும் சங்கமிக்கும் வழுத்தூர் எனும் சிற்றூரில் சீரோடும், சிறப்போடும் மாணவர்களின் அறிவு பசியை நீக்கி, அறிவுத்திரன் கூட்டி, மாணவர்களுக்கு தலைமைப் பண்பு அதிகரிக்கவும், ஆளுமைத்திறன் வளர்வதற்கும் சமுதாயத்தில் நல்ல தொரு அங்கீகாரத்தோடு வாழ்வதற்கும் வழிகாட்ட 1993 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அலிஃப் இங்கிலீஷ் ஸ்கூல் என்று ஆரம்பிக்கப்பட்டு 1998 - 99 கல்வி ஆண்டு முதல் ருகையா - அமீர் கல்வி அறக்கட்டளை மூலம் அலிஃப் மெட்ரிக் பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது.
ஆரம்பிக்கப்பட் 1993 - 94 கல்வியாண்டில் 07 மாணவர்களுடனும், 4 ஆசிரிய பெருமக்களுடனும் துவக்கி இன்று சுமார் 450 மாணவர்களுடனும், 25 ஆசிரியர் பெருமக்களுடனும் பள்ளி சிறப்பாக நடைபெறுகிறது.
கல்வி கற்பிக்கும் அலிஃப் மெட்ரிக் பள்ளி கிராமப்புறப் பள்ளியாக இருந்தாலும், நகர பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு திறமையுடன் மாணவர்களை வழி நடத்திச் செல்கிறது.
ஒப்பில்லா சமூகம் உருவாக ஒளிமிக்க மாணவர்கள் தேவை, அத்தகைய மாணவர்களை உருவாக்கும் உன்னத பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கும் பள்ளிகளில் முதன்மை யாக அலிஃப் மெட்ரிக் பள்ளி திகழ்கின்றது.

தஞ்சை நெஞ்சை அள்ளும் (மாவட்டத்தில்) தனிச் சிறப்புடன் திகழும் பள்ளிகளில் தனக்கென ஒர் தனியிடம் பிடித்து சுமார் 450 மாணவர் களைக் கொண்ட ஒரு கல்விச் சோலையை உருவாக்கி இன்று தனது லட்சியப் பாதையில் 17 ஆண்டு கடந்து தொடர் நடைபோடுகிறது அலிஃப் மெட்ரிக் பள்ளி..
பள்ளியின் நோக்கம்:
பள்ளியின் உயர்ந்த நோக்கமே மாணவர்களை ஒழுக்கத்திலும், கட்டுப்பாட்டிலும் உயர்ந்தவர்களாக உருவாக்கி கல்வியில் சிறந்தவர்களாக எதிர்கால சவால்களை நம்பிக்கையோடும் தயார் படுத்துவதுதான்.
கல்வி அறக்கட்டளை, நிர்வாகம்:
கல்வி விலைப் பொருளாக மாறிவாரும் காலச் சூழலில் தொண்டு நோக்குடன் மெட்ரிக் வழி (அங்கில வழி) கல்வியை எளியோர்க்கும் எட்டச் செய்யும் இலக்குடன் தனது தாய் - தந்தையர் பெயரில் ருகையா - அமீர் கல்வி அறக்கட்டளை துவக்கப்பட்டு திறம்பட அலிஃப் மெட்ரிக் பள்ளியை நடத்தி வருகிறார். அதன் நிறுவனர் கல்விச் செம்மல் ஹாஜி .. பசீர் அஹமது.

ருகையா - அமீர் கல்வி அறக் கட்டளையின் நிறுவனர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கல்விச் செம்மல் ஹாஜி .. பசீர் அஹமது நிறைய அறிந்தவர், அடக்கமானவர், பெற்றோர் மற்றும் மாணவர்களின் பேரன்பைப் பெற்றவர். சிந்தனைத் திறனும், சிறந்த நிர்வாகத் திறனும் கொண்ட தாளாளர் கல்விச் செம்மல் ஹாஜி .. பசீர் அஹமது வழிகாட்டுதலின் கற்றறிந்த - திறன்மிக்க ஆசிரியர்கள் குறித்த அக்கறையுடன் தாளாளருடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஆசிரியர்கள்:
ஆர்வமும், அர்பணிப்பும் தகுதியும் வாய்ந்த ஆசிரிய பெருமக்கள் ஒவ்வொரு மாணவனின் தகுதித் தன்மையை கண்டறிந்து அவனது நிறைகுறைகளை உணர்ந்து அவனுக்கு எற்ற விதத்தில் கற்பித்து அவனது முழு ஆற்றலை வெளிக்கொணரும் சக்திமிக்க ஆசிரியர்களைக் கொண்டபள்ளியாக உள்ளு.
பள்ளயைப் பற்றி
முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிணி வகுப்புகள் நடைபெறுகிறது. சுமார் 1500 புத்தகங்களைக் கொண்ட நூலகம் அமைய பெற்றுள்ளது. மாணவர்கள் விளையாட விளையாட்டு திடல் விசாலமாக உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தனியாக அறிவியல் ஆய்வகம் அமைய பெற்றுள்ளது.

எங்கள் பார்வை
சிறந்த சேவை... நிறைவான கல்வி...
மாணவர்கள் கல்வியில் கரை சேர அலிஃப் மெட்ரிக் பள்ளி சிறந்த வழிகாட்டியாக விளங்குவதற்கு காரணம் சந்தர்ப்பம் தானாக வருவதில்லை..! சந்தர்ப்பத்தை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் மாணவர்கள் நன்கு பயின்றிட அறிவுத்திறன் மிக்க  மாணவனாக உருவாக சந்தர்ப்பத்தை அவர்களே உருவாக்கித் தருகிறார்கள்.