Tuesday, March 26, 2013

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களை வாழ்த்துகிறோம்..

நாளை எஸ்.எஸ்.எல்.சிதேர்வை தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் 3012 மையங்களில் 10லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள்.இவர்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர்மாணவர்கள். 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர்மாணவிகள்இவர்கள் அனைவரும் பள்ளிகளில்படித்து தேர்வு எழுதுபவர்கள்இவர்கள் தவிர 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும்தேர்வு எழுதுகின்றனர்..

தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45மணி வரை நடைபெறும்காலை 10 மணிக்குவினாத்தாள் கொடுக்கப்படும்வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும்அதன்பிறகுவிடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும்தேர்வு மையங்களில்மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும்முறைகேடுகளை தடுத்திடவும் தலைமை ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

Saturday, March 9, 2013

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 2012-2013 கல்வி ஆண்டில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பிரிவு உபச்சார விழா

நாள்:09.03.2012 சனிக்கிழமை மாலை3.30 மணியளவில்
இடம்: அலிஃப் மெட்ரிக்பள்ளி,வளாகம்.
தலைமை: “கல்விச் செம்மல்”"சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது…
விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
அன்புடன் அழைக்கும்: மாணவ - மாணவிகள்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...

Monday, March 4, 2013

தேர்வு நாள் சிந்தனைகள்...!

அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களின் தேர்வு காலம் இது. குறிப்பாக 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்கள் அரசு தேர்வுகளை முடிக்கும் நிலையிலும் பிற மாணவர்கள் இன்னும் சில தினங்களில் துவங்கவிருக்கும் தங்கள் தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கும் இந்நேரத்தில் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்திற்கும் சில அறிவுரைகள்.

தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் ஒற்றுமை இணையக்குழு துஆச் செய்கிறது அவர்கள் மகத்தான வெற்றிபெறுவதற்கு மனதார பாராட்டுகிறது.

பெற்றோருக்கு அறிவுரைகள்
1. தேர்வு என்றவுடனேயே மாணவர்களை பீதிக்குள்ளாக்கி அச்சுறுத்தும் நிலையைத்தான் நாடெங்கும் பார்க்கிறோம். தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஒரு மாணவனின் ஒட்டுமொத்த இலட்சியம் என்பதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டுள்ளது. நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறத்தான் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆயினும் அல்லாஹ்விடம் தவக்குல், மற்றும் ஈமானிய நிலை இதன்மூலம் மறக்கடிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. பெற்றோர்களே! மறுமையில் வெற்றிபெறுவதைத்தான் ஒவ்வொரு முஸ்லிம் மாணவ மாணவியர்களின் முதல் குறிக்கோளாக போதிக்கப்படுவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதைத்தான் முதல் இலட்சியமாக மனதில் பதிய வைக்கப்படவேண்டும். இவ்வுலக கல்விகளின் தேர்வுகள் அதை ஒப்பிடும்போது இரண்டாம் நிலையில்தான் வைக்கப்பட வேண்டும்.