Monday, March 4, 2013

தேர்வு நாள் சிந்தனைகள்...!

அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களின் தேர்வு காலம் இது. குறிப்பாக 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்கள் அரசு தேர்வுகளை முடிக்கும் நிலையிலும் பிற மாணவர்கள் இன்னும் சில தினங்களில் துவங்கவிருக்கும் தங்கள் தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கும் இந்நேரத்தில் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்திற்கும் சில அறிவுரைகள்.

தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் ஒற்றுமை இணையக்குழு துஆச் செய்கிறது அவர்கள் மகத்தான வெற்றிபெறுவதற்கு மனதார பாராட்டுகிறது.

பெற்றோருக்கு அறிவுரைகள்
1. தேர்வு என்றவுடனேயே மாணவர்களை பீதிக்குள்ளாக்கி அச்சுறுத்தும் நிலையைத்தான் நாடெங்கும் பார்க்கிறோம். தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஒரு மாணவனின் ஒட்டுமொத்த இலட்சியம் என்பதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டுள்ளது. நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறத்தான் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆயினும் அல்லாஹ்விடம் தவக்குல், மற்றும் ஈமானிய நிலை இதன்மூலம் மறக்கடிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. பெற்றோர்களே! மறுமையில் வெற்றிபெறுவதைத்தான் ஒவ்வொரு முஸ்லிம் மாணவ மாணவியர்களின் முதல் குறிக்கோளாக போதிக்கப்படுவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதைத்தான் முதல் இலட்சியமாக மனதில் பதிய வைக்கப்படவேண்டும். இவ்வுலக கல்விகளின் தேர்வுகள் அதை ஒப்பிடும்போது இரண்டாம் நிலையில்தான் வைக்கப்பட வேண்டும்.

Sunday, February 17, 2013

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட் கேடயம்..!

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் 2011 - 12 கல்வி ஆண்டில் சமுதாய மாணவிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு,அலிஃப் மெட்ரிக் பள்ளிக்கு 100% வெற்றி தேடித் தந்த மாணவ மாணவிகளுக்கு ---முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயம் அளிப்பு விழாவும் ஆக நாற்பெரும் விழா பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். பஷீர் அஹம்மது தலைமையில் நடைபெற்றது..

Wednesday, February 13, 2013

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நாற்பெரும் விழா

 தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் 2011 - 12 கல்வி ஆண்டில் சமுதாய மாணவிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு,அலிஃப் மெட்ரிக் பள்ளிக்கு 100% வெற்றி தேடித் தந்த மாணவ மாணவிகளுக்கு ---முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயம் அளிப்பு விழாவும் ஆக நாற்பெரும் விழா பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். பஷீர் அஹம்மது தலைமையில் நடைபெற்றது..

Wednesday, February 6, 2013

நமது பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

 12 ஜனவரி 2013 செவ்வாய்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தாளாளர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹம்மது தலைமை தாங்கினார். பாபநாசம் சார்நிலை கருவூலர். திருமிகு பெரியசாமி பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் கோபிநாதன் வழுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இரா.தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் பி.ஜே.எ. ஜாபர் அலி, குர்ஷீத் ஆகியோர் பொங்கல் பற்றி கருத்துகள் வழங்கினார்கள்.