Friday, March 24, 2017

வழுத்துரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்..!

நாள்: 8,9 - ஏப்ரல் -2017
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்

சிறப்பு மருத்துவர்கள் வருகை
இருதய நல சிறப்பு மருத்துவர்
பொது மருத்துவர்கள்
வருகை தர உள்ளனர்.
ஈ.சி.ஜி, எக்கோ பரிசோதனைகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இலவசமாக செய்யப்படும்.
இம்முகாமில் கலந்துக்கொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்னில் அழைத்து முன்பதிவு செய்துக்கொள்ளவும்.
செல்: 9787255454, 9585251977, 9443407665, 8056584382

மேலும் இதுபோன்ற நற்சேவைகளை தொடர்ந்து நமதூர் மக்களுக்கு செய்ய தங்களது மேலான ஆலோசனைகளையும், பொருளுதவியும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
என்றும் மக்கள் சேவையில்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977

Monday, March 13, 2017

See Alif Matriculation School ( https://maps.app.goo.gl/i/UptYu ) in Google Maps.

Our school place is updated in google map. Visit.
நமது அலிஃப் மெட்ரிக் பள்ளிக்கு ஈசியாக செல்லலாம். கூகுள் மேப் மூலமாக..
See Alif Matriculation School ( https://maps.app.goo.gl/i/UptYu ) in Google Maps.

Thursday, March 9, 2017

எம் பள்ளியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா நிகழ்வுகள்..!

 விழாவினை சிராஜுல்மில்லத் த.இ.பேரவையின் மாநில தலைவர் ஹாஜி. அ. பஷீர் அஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார். ருகையா அமீர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகக்குழு இயக்குனர் ப. முஹம்மது அஸ்லம் அவர்கள் வரவேற்றார். நிகழ்ச்சியினை லயன்ஸ் மாவட்ட தலைவர் S.K சுப்பராமன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். விருது பொறுவோருக்கு அறிமுக உரையை சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவையின் மாநில பொருளாளர் K.z. இனையத்துல்லா அவர்கள் வழங்கினார்கள். லயன். J. கார்த்திக் பாபு அவர்கள் விருது வழங்கி சிறப்புரையாற்றினர்கள். திருமதி சாந்த் பேகம் மற்றும் லயன்ஸ் V. கனிமொழி ஆகியோரின் சமூக பணியினை பாராட்டி விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது. நற்குணசீலர் M.J. பஷீர் அஹம்மது, O.P.A பஷிர் அஹம்மது மற்றும் லயன் S.K. சுப்பராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். லயன் டாக்டர் M.K.S பரீத் அவர்கள் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Wednesday, March 8, 2017

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

இன்று தேர்வு எழுத இருக்கும் அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 15 நபர்களுக்கும். இறைவன் பூரண உடல் நலத்துடன் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற துஆ செய்கின்றோம்...!!!
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது...
💐
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட அலிஃப் மெட்ரிக் பள்ளி வாழ்த்துகிறது....
********ADMISSION OPEN*******
PHONE: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
www.alifmatric.blogspot.com

Monday, March 6, 2017

உலக மகளிர் தின விழாவில் விருது வழங்கும் விழா..!

நாள்: 08-03-2017 புதன்க்கிழமை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்
அனைவரும் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன் அழைக்கும்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
********ADMISSION OPEN*******
PHONE: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
www.alifmatric.blogspot.com