Thursday, August 1, 2013

அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் மற்றும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்தும் இப்த்தார் நிகழ்ச்சி அழைப்பு..!

  நாள்: 01-08-2013 வியாழன் மாலை 5.00 மணி
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழுத்தூர்
தலைமை:
அய்யம்பதி ராஜா (எ) ராஜா நஜீர் அஹம்மது அவர்கள்
தலைவர்அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)
வரவேற்புரை:
ஹாஜி A.பஷீர் அஹம்மது அவர்கள்
(தஞ்சை மாவட்ட செயலாளர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
சிறப்புரை:
F.அப்துல் கரீம் அவர்கள்
சிறப்பு விருந்தினார்
"சமூக சமத்துவ தளபதி"
குடந்தை அரசன் அவர்கள்
நன்றியுரை:
சிவாஜி
(செயலாளர்,அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)

Saturday, July 13, 2013

வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!

 வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 A2 மாவட்ட தலைவர் "சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "சேவைத்திலகம்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் இந்த வருடத்தின் (2013) இரண்டாவது விருதினை நாளை (14-07-2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு சென்னை ராம் ராவ் கலை அரங்கத்தில் "STAR ACHIEVERS AWARD" பெற இருக்கிறார்கள்.. அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்று தங்களது சேவைகளை தொடர வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற துஆ செய்கிறோம்..! ஆமின்.! ஆமின்..!! யா ரப்பல் ஆலமின்..!




Tuesday, June 25, 2013

தமிழகத்தில் பள்ளி வேலை நேரம், திடிர் மாற்றம்! நாளை முதல் காலை 9 மணிக்கு பள்ளிகள், இயங்கும் திட்டம் அமல்படுத்த படும் என எதிர்பார்ப்பு!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளின் வேலை நேரத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதையடுத்து, காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும் எனக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் இதுவரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்து வந்தன. இனிமேல் முப்பருவ முறை கொண்டு வரப்பட உள்ளது. இக் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்கள் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு பாட வேளையும் 45 நிமிடங்களாக இருந்தது. காலை 9 மணிக்குத் துவங்கும் பள்ளியில் 9.20 வரை இறைவணக்கம் நடத்தப்படும். 9.20 முதல் 10 மணி வரை முதல் பாட வேளை தொடங்கும் என்று அந்த சுற்நறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கடைசியாக ஒரு மணி நேரத்தில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பேச்சாற்றல், நடிப்பாற்றல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் நடவடிக்கைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இம்மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 12, 2013

எங்கள் பள்ளி தாளாளர் "சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் "சேவைத்திலகம்" விருது பெற்றார்..!

வாழ்க்கையில் உழைப்பில் உயர்ந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுப்பட்டு பொது மக்களுக்கு குறிப்பாக நலிந்த பிரிவினர்களுக்கு பயன் தரும் வகையில் கல்வித்துறை - ஆன்மீகத்துறை - தொழில் துறை - அரசியில் துறை - சமூகத்துறை - விளையாட்டு துறை ஆகியவற்றில் இணைந்து செயலாற்றிய தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 2 மாவட்ட தலைவர்
"சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் ஆகிய தங்களை சிறப்பித்து பாரட்டும் வகையில் "சேவைத்திலகம் விருது" வழங்கி பாரட்டுவதாக அகடாமியின் செயலாளர் கோபாலன் தந்து அறிமுக உரையில் கூறி அழைத்தின் பேரில் ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்களுக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் விருது வழங்கி பாரட்டினார்.
விழாவில் சிவங்கை மாவட்டச்செயலாளர் கே.இஜட்.இனாயத்துல்லா பங்கேற்றார்..


Saturday, June 8, 2013

எம் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் ஓரு செய்தி..!

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 2 மாவட்ட தலைவர் 
"சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் நாளை (8-06-2013) சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சென்னை பால்ம்கோரோம் ஹோட்டலில் "சேவைத்திலகம் விருது" பெற இருக்கிறார்கள்..
அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்று தங்களது சேவைகளை தொடர வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற துஆ செய்கிறோம்..!
ஆமின்.! ஆமின்..!! யா ரப்பல் ஆலமின்..!