அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களின் தேர்வு காலம் இது. குறிப்பாக 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்கள் அரசு தேர்வுகளை முடிக்கும் நிலையிலும் பிற மாணவர்கள் இன்னும் சில தினங்களில் துவங்கவிருக்கும் தங்கள் தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கும் இந்நேரத்தில் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்திற்கும் சில அறிவுரைகள்.
தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் ஒற்றுமை இணையக்குழு துஆச் செய்கிறது அவர்கள் மகத்தான வெற்றிபெறுவதற்கு மனதார பாராட்டுகிறது.
பெற்றோருக்கு அறிவுரைகள்
1. தேர்வு என்றவுடனேயே மாணவர்களை பீதிக்குள்ளாக்கி அச்சுறுத்தும் நிலையைத்தான் நாடெங்கும் பார்க்கிறோம். தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஒரு மாணவனின் ஒட்டுமொத்த இலட்சியம் என்பதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டுள்ளது. நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறத்தான் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆயினும் அல்லாஹ்விடம் தவக்குல், மற்றும் ஈமானிய நிலை இதன்மூலம் மறக்கடிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. பெற்றோர்களே! மறுமையில் வெற்றிபெறுவதைத்தான் ஒவ்வொரு முஸ்லிம் மாணவ மாணவியர்களின் முதல் குறிக்கோளாக போதிக்கப்படுவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதைத்தான் முதல் இலட்சியமாக மனதில் பதிய வைக்கப்படவேண்டும். இவ்வுலக கல்விகளின் தேர்வுகள் அதை ஒப்பிடும்போது இரண்டாம் நிலையில்தான் வைக்கப்பட வேண்டும்.