Friday, May 31, 2013

சாதனை..! சாதனை..!! சாதனை..!!!

 100% 100% 100% 
வழுத்தூர் வரலாற்றில் ஒரு இமலாய சாதனை.. 
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..! முதல் மதிப்பெண் 
H.Maymun Sahana
474/500
இரண்டாம் மதிப்பெண்
M.Farhana Begum
469/500
முன்றாம் மதிப்பெண்
S.Mohamed Sharukhan 458/500
நான்காம் மதிப்பெண்
S.Issath Nihar 439/500
எல்ல வல்ல இறைவனின் கிருபையினால் இவ்வருடம் எம் மாணக்கர் 100 % தேர்ச்சி தந்து பெருமைப்படுத்தி உள்ளர்கள்.. தொடர்ந்து மூன்று அண்டுகளாக 100 % சதவீத தேர்ச்சியினை பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர் பெருமக்களையும், அதற்க்கு உறுதுணையாக நின்ற பெற்றோர்களையும் வாழ்த்தி பாரட்டுகிறோம்..
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்

Thursday, May 30, 2013

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!

+2 தேர்வு முடிவுகள் வரும் மே 9 ஆம் தேதி காலை 1௦ மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி காலை 9.15 க்கும் வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்வுத் துறை இயக்குநர் தெரவித்துள்ளார்.

ஆகவே நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பயின்ற மாணவ செல்வங்களுக்காக துவா செய்யவும்...
அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வல்ல ரஹ்மானிடம் பாரத்திப்போம்..
ஆமின்..! ஆமின்..! யா ரப்பல் ஆலமீன்..

தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்கள்
தமிழக +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள அரசு இணையதளங்கள்:

http://tnresults.nic.in/

http://www.dge.tn.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.dge3.tn.nic.in/

வாழ்த்துக்கள்......!

Monday, May 27, 2013

கோடை வெயில்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளி வைப்பு- ஜூன் 10-ல் தான்..!

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் தொடர்வதால் தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஒருவாரம் கழித்து 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்து போய்விடவில்லை. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக 10--ந் தேதிக்கு திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிகள் திறப்பை ஒருவார காலம் ஒத்தி வைத்துள்ளது. தமிழகத்திலும் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, May 10, 2013

அட்மிஷன் நடைபெறுகிறது...

உங்கள் பிள்ளைகளை உடனே சேர்ப்பீர்!!!
எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
* எந்த பள்ளியிலும் இல்லாத மிகக் குறைந்த கட்டணம்…..!
* திறமைமிக்க ஆசிரிய-ஆசிரியைகள் கொண்டு சிறப்பு பயிற்சி
* இயற்கை எழில்மிகு சூழல்
* மாணவ செல்வங்கள் படிப்பதற்கேற்ற அனைத்து வசதிகளும் கொண்ட நிறுவனம்
* பள்ளிக்கு வந்து செல்ல வேன் வசதி மிகக் குறைந்த கட்டணத்தில்
* மாணவ,மாணவிகளுக்கு இஸ்லாமிய கல்வி பயிற்சி
* இரண்டாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அடிப்படைக்கல்வி பயிற்சி
* சுமார் 4,000 புத்தகங்களை கொண்ட LIBRARY…
* மேலும் பல....!!!
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com

Tuesday, April 16, 2013

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டு தோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், அரசு இணையதளங்களில் மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் இணையதளங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது.