Thursday, March 1, 2018

பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்...!!!
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது...
💐
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட  அலிஃப் மெட்ரிக் பள்ளி வாழ்த்துகிறது....

Monday, February 26, 2018

அலிஃப் மெட்ரிக் பள்ளியின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு..!

 நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் அ. பஷீர் அஹ்மது அவர்கள் தலைமையில் நடந்தது. இயக்குனர் ப. முஹம்மது அஸ்லம் அவர்கள் வரவேற்றார். பள்ளியின் ஒராண்டு செயல்பாடுகளை முதல்வர் சிவா ஆண்டறிக்கை முலம் வாசித்தார். 25-ம் ஆண்டு சிறப்பு மலரை நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிட்டு, மாணவர்களுக்கு விளையாட்டு, கட்டுரை, ஒவியம், மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். விழாவினை K.Z இனையத்துல்லாஹ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
 

Tuesday, February 20, 2018

அலிஃப் மெட்ரிக் பள்ளி 25-ம் ஆண்டு விழா அழைப்பு..!

நாள்: 24-02-2018 சனிக்கிழமை📆
நேரம்: மாலை 4.00 மணி முதல்
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்.

தலைமை
கல்விச்சேம்மல் சேவைச்செம்மல் காயிதே மில்லத் விருதாளர்
ஹாஜி லயன் அ.பஷீர் அஹம்மது அவர்கள்
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)

📔📔📔📔📔📔
25-ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியிட்டு உரை
இரா.துரைக்கண்ணு அவர்கள்
(தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர்)
🏆🏆🏆🏆🏆🏆
மாணக்கர்களுக்கு விருதுகள் வழங்கி உரை
M.தமீமுன் அன்சாரி M.A, M.L.A அவர்கள்
(நாகை சட்டமன்ற உறுப்பினர்)