Monday, May 27, 2013

கோடை வெயில்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளி வைப்பு- ஜூன் 10-ல் தான்..!

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் தொடர்வதால் தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஒருவாரம் கழித்து 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்து போய்விடவில்லை. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக 10--ந் தேதிக்கு திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிகள் திறப்பை ஒருவார காலம் ஒத்தி வைத்துள்ளது. தமிழகத்திலும் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, May 10, 2013

அட்மிஷன் நடைபெறுகிறது...

உங்கள் பிள்ளைகளை உடனே சேர்ப்பீர்!!!
எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
* எந்த பள்ளியிலும் இல்லாத மிகக் குறைந்த கட்டணம்…..!
* திறமைமிக்க ஆசிரிய-ஆசிரியைகள் கொண்டு சிறப்பு பயிற்சி
* இயற்கை எழில்மிகு சூழல்
* மாணவ செல்வங்கள் படிப்பதற்கேற்ற அனைத்து வசதிகளும் கொண்ட நிறுவனம்
* பள்ளிக்கு வந்து செல்ல வேன் வசதி மிகக் குறைந்த கட்டணத்தில்
* மாணவ,மாணவிகளுக்கு இஸ்லாமிய கல்வி பயிற்சி
* இரண்டாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அடிப்படைக்கல்வி பயிற்சி
* சுமார் 4,000 புத்தகங்களை கொண்ட LIBRARY…
* மேலும் பல....!!!
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com

Tuesday, April 16, 2013

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டு தோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், அரசு இணையதளங்களில் மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் இணையதளங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது.

2000 -ம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழில் நமது பள்ளியை பற்றி வெளிவந்த செய்தி..

2000 -ம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழில் நமது பள்ளியை பற்றி வெளிவந்த செய்தி..

Tuesday, March 26, 2013

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களை வாழ்த்துகிறோம்..

நாளை எஸ்.எஸ்.எல்.சிதேர்வை தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் 3012 மையங்களில் 10லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள்.இவர்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர்மாணவர்கள். 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர்மாணவிகள்இவர்கள் அனைவரும் பள்ளிகளில்படித்து தேர்வு எழுதுபவர்கள்இவர்கள் தவிர 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும்தேர்வு எழுதுகின்றனர்..

தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45மணி வரை நடைபெறும்காலை 10 மணிக்குவினாத்தாள் கொடுக்கப்படும்வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும்அதன்பிறகுவிடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும்தேர்வு மையங்களில்மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும்முறைகேடுகளை தடுத்திடவும் தலைமை ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.